வைரலான ‘சின்ன மச்சான்’ பாடல்!

சூப்பர் ஹிட்டான ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன மச்சான்…’ பாடல்!

செய்திகள் 20-Sep-2018 5:36 PM IST VRC கருத்துக்கள்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக அம்ரீஷ் இசையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியர் ‘சின்ன மச்சான்… செவத்த மச்சான்…’ என்று துவங்கும் பாடலை பாடியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த பாடலை யு-ட்யூபில் 53 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்திருக்கிரார்கள். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகி வைரலாகியுள்ள நிலையில் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம், இசை அமைப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது டி.சிவா பேசும்போது, ‘‘இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமியால் பாடப்பட்டபோதே இது சூப்பர் ஹிட்டாகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த பாடலை ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் அம்ரீஷ் இசையில் சில வரிகலை மாற்றி அமைத்து பயன்படுத்திகொண்டோம். இப்போது அந்த பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் நாங்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்’’ என்றார்.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, ‘அம்ரீஷ் இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும்போது அடுத்து வருகிற பாடல்களும் இன்னும் பட்டையை கிளப்பும்’’ என்றார்.

இசை அமைப்பாலர் அம்ரீஷ் பேசும்போது, இந்த பாடலை ட்வீட் மூலம் பாப்புலராக்கிய தனுஷ் சாருக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரபுதேவா சார் எவ்வளவோ ட்யூனுக்கு விதவிதமான டான்ஸ் ஆடி இருக்கிரார். இந்த ‘சின்ன மச்சான்…’ பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த பாடல் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருந்து வருவது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்றார்.

சமீபத்தில் இதுமாதிரி எந்த கிராமீய பாடலும் இவ்வளவு ஹிட் ஆனதில்லை. இந்த பாடல் மூலம் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியர் சினிமாவிலும் கால் பதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;