‘ஜெயம்’ ரவி-24 புதிய தகவல்கள்!

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் படத்தின் படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

செய்திகள் 20-Sep-2018 4:05 PM IST VRC கருத்துக்கள்

‘அடங்க மறு’ ‘தனி ஒருவன்-2’ ஆகிய படங்களுடன் மற்றுமொரு படத்தில் ‘ஜெயம்’ ரவி நடிப்பது குறித்த தகவலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் ‘ஜெயம்’ ரவியின் 24-வது படம் என்ற அறிவிப்பும் அப்போது வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அத்துடன் இந்த படத்தின் புதிய தகவலாக இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி, காஜல் அகர்வாலுடன் கே.எஸ்.ரவிகுமார், சம்யுக்தா ஹெக்டே, ‘யோகி’ பாபு ஆகியோர் நடிக்கிறார்கள் என்பதையும், இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#JR24 #JayamRavi #YogiBabu #Pradeep #KajalAggarwal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;