நோயுற்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா!

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா!

செய்திகள் 20-Sep-2018 12:24 PM IST VRC கருத்துக்கள்

பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் நடிகர் சூர்யா, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுவன் தினேஷ் குமார். 16 வயதான இவர், ராமர் - மல்லிகா தம்பதியின் மூத்த மகனாவார். பிறக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்த தினேஷ் குமார், 10 வயதில் நடக்கும்போது திடீர் திடீரென்று கீழே விழ ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து மருத்துவரிடம் தினேஷ் குமாரை காண்பித்தப்போது அவருக்கு தசை சிதைவு நோய் இருப்பதும், அதற்கு சரியான சிகிச்சை முறைகள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை தொடர்ந்து வரும் தினேஷ் குமார் தனக்கு தெரிந்த ஓவிய கலையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தினேஷ் குமார், நடிகர் சூர்யாவை பார்த்து பேச வேண்டும் என்று விரும்பியுள்ளார். சிறுவன் தினேஷ் குமாரின் இந்த ஆசையை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னைக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னைக்கு வந்த தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வரவேற்று சிறுவனிடம் பேசி அவனுக்கு நிறைய பரிசு பொருட்கள் வழங்கினர். அத்துடன் சிவகுமார் வரைந்த ஒரு ஓவியத்தையும் தினேஷ் குமாருக்கு பரிசாக வழங்கி அவரை உற்சாக மடைய வைத்துள்ளனர். இந்த சந்திப்ப்பு சிறுவன் தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

#Suriya #Dinesh #SuriyaFan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;