தனுஷ், சந்தோஷ் நாராயணன் இணைந்து தரவிருக்கும் முதல் ட்ரீட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படப்பாடல்கள் 23-ஆம் தேதி வெளியாகிறது.

செய்திகள் 18-Sep-2018 5:24 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் புரொமோஷன்ஸ் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி, சுப்பிரமணியம் சிவா என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்! தனுஷ் தயாரித்த ரஜினியின் ‘காலா’வுக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணன், இதுவரை தனுஷ் நடித்த எந்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. அந்த குறை ‘வட சென்னை’ படம் மூலம் நிறைவேறியுள்ளது. அதனால் சந்தோஷ் நாராயணன், தனுஷ் காம்பினேஷனில் முதன் முதலாக உருவாகியுள்ள ‘வட சென்னை’ படப் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, ‘வட சென்னை’ பாடல்கள் வருகிற 23-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும், தனுஷும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படம் அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனித்துள்ளார்.

#Dhanush #AishwaryaRajesh #VadaChennai #VetriMaaran #SanthoshNarayanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;