‘தர்மதுரை’யின் அதே ரிசல்ட்!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 18-Sep-2018 2:54 PM IST VRC கருத்துக்கள்

மனித வாழ்வியலுடன் ஒத்துப்போவது மாதிரியான கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின், தமன்னா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் காட்சி நடைபெற்றது என்றும், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு அனைவரும் பாரக்க கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சீனுராமசாமி இயக்கத்தில் இதற்கு முன் வெளியான ‘தர்மதுரை’ படத்திற்கும் சென்சாரில் இதே ரிசல்ட் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#KanneKalaimane #UdhaynidhiStalin #Tamannah #SeenuRamasamy #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;