அதர்வாவுடன் இணையும் ‘கடைக்குட்டி சிங்கம்’ பட ஹீரோயின்!

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் பிரியா பவானி சங்கர்!

செய்திகள் 17-Sep-2018 12:22 PM IST VRC கருத்துக்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படம் ‘குருதி ஆட்டம்’. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராதாரவி, ராதிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தேர்வாகியுள்ள நிலையில் கதாநாயகி தேர்வு நடந்த வந்தது. இப்போது அந்த தேர்வில் ‘குருதி ஆட்ட’த்திற்கான கதாநாயகியாக ‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து ‘குருதி ஆட்டம்’ பட குழுவினர் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளீயிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்த படமாக அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் பிரியா பவானி சங்கர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை ‘ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் முருகானந்தம் தயாரிக்க இப்படம் மதுரை ;பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக உருவாக இருக்கிறது.

#Atharvaa #KuruthiAattam #PriyaBhavaniShankar #SriGanesh #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;