ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் த்ரிஷா. அதோடு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘96’ படமும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அவர் ஹீரோயினாக நடிக்கும் மற்றொரு படமான ‘பரமபதம் விளையாட்டு’ படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருஞானம் டைரக்ஷனில் உருவாகிவரும் இப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை 24பிக்ஷீs நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா....
‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கிய சரவணன் கடைசியாக இயக்கிய...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘96’. பிரேம் குமார் இயக்கிய இந்த...