பிக்பாஸ் ‘ஆரவ்’வின் ஹீரோ அவதாரம் : ராஜபீமா!

பிக்பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 15-Sep-2018 11:35 AM IST VRC கருத்துக்கள்

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் முதலிடத்தைக் கைப்பற்றி தமிழக ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஆரவ். இவர் ‘சைத்தான்’ படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஆரவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. சுரபி ஃபிலிம்ஸ் எஸ்.மோகன் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘ராஜபீமா’ என்று பெயரிட்டுள்ளனர். ‘நேற்று இன்று நாளை’ படத்தின் கதை விவாதக்குழுவில் இடம்பெற்றிருந்த ‘கருந்தேள் ராஜேஷ்’ இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார்.

யானையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிடுவு செய்ய, ‘சத்யா’ பட இசையமைப்பாளர் சைமன் கிஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;