தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார்!

தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் நடிக்கும் படம்!

செய்திகள் 7-Sep-2018 10:58 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘வட சென்னை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன! இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு வேலைகளை முடித்த கையோடு தனுஷ் தான் அடுத்து இயக்கி நடிக்கவிருக்கும் பட வேலைகளை துவங்கி விட்டார். இந்த படத்தை சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தை தயரித்த முரளி ராமசாமியின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரம் உருவாகிறது.

இந்த படத்தில் தனுஷுடன் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க, நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் என்று பல பிரபலங்கள் இப்படத்தில் கை கோர்க்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கவனிக்க ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. .

#Dhanush #AditiRaoHydari #Srikanth #SJSuryah #Nagarjuna #SeanRoldan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;