சூர்யாவின் ‘மாசு’வை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’

வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு’ படத்தை தொடர்ந்து ‘பார்ட்டி’ படத்தின் சாட்லைட் உரிமையையும் கைபற்றிய சன் டிவி!

செய்திகள் 5-Sep-2018 4:58 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ‘கயல்’ சந்திரன், ’ சிவா, ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் ‘பார்ட்டி’ டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரித்துள்ள இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ‘பார்ட்டி’யின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்க, சூர்யா நடிப்பில் வெளியான ‘மாசு’ படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைபற்றியிருந்தது. இப்போது ‘மாசு’வை தொடர்ந்து ‘பார்ட்டி’யின் உரிமையையும் கைபற்றியுள்ளது சன் டிவி. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘பார்ட்டி’க்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்க, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படி பல பிரபலங்கள இணைந்துள்ள ‘பார்ட்டி’யின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளார் தயாரிப்பாளர் டி.சிவா!

#VenkatPrabhu #Party #Regina #NivethaPethuraj #Sanchitha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

7 (செவன்) - ட்ரைலர்


;