மீண்டும் இணையும் ‘காதலில் விழுந்தேன்’ ஜோடி!

அறிமுக இயக்குனர் சச்சின் தேவ் இயக்கத்தில் நகுல், சுனைனா நடிக்கும் படம்!

செய்திகள் 5-Sep-2018 12:40 PM IST VRC கருத்துக்கள்

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் பிரபலமான ஜோடி நகுல் - சுனைனா! ‘காதலில் விழுந்தேன்’ படத்தை தொடர்ந்து ‘மாசிலாமணி’ என்ற படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இப்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் சச்சின் தேவ் இயக்குகிறார். இப்படத்திற்கான பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தில் நகுல் சுனைனாவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வர, அந்த தேர்வுகள் முடிவடைந்ததும் அது குறித்த அதிகார்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது. நகுல் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ‘செய்’. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

#Nakkul #Sunaina #SachinDhev

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி முதல் 7 நிமிடங்கள்


;