மீண்டும் இணையும் நிவின்பாலி, மஞ்சிமா மோகன்!

இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் இணையும் மஞ்சிமா மோகன்!

செய்திகள் 4-Sep-2018 2:55 PM IST VRC கருத்துக்கள்

நிவின் பாலி, மோகன் லால், ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள பெரிய பட்ஜெட் படமான ‘காயம்குளம் கொச்சுண்ணி’ தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் விரைவில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘மூத்தோன்’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நினின் பாலி அடுத்து ஹனீஃப் அடேனி இயக்கத்தில் ‘மைக்கேல்’ என்ற ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் நிவின் பாலியுடன் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே இவர்கள் இருவரும் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள்! தமிழில் கௌதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்து வரும் மஞ்சிமா மோகன், நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவிருக்கிறது. இந்த படத்தை இயக்கும் ஹனீஃப் அடேனி ஏற்கெனச்வே மம்முட்டி நடிப்பில் வெளியான ‘தி கிரேட் ஃபாதர்’ என்ற படத்தை இயக்கியவர் என்பதும் மம்முட்டி நடித்த ‘ஆப்ரஹாமிண்டெ சந்ததிகள்’ என்ற படத்தின் கதையை எழுதியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

#NivinPauly #ManjimaMohan #Mikhael

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் டீஸர்


;