‘ஜாங்கோ’ படப்பிடிப்பு துவங்கியது!

பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் துவக்கி வைத்த ‘ஜாங்கோ’ படப்பிடிப்பு!

செய்திகள் 29-Aug-2018 6:08 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் ‘ஜாங்கோ’ என்ற ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் இந்த படத்தில் புதுமுகம் சதீஷ் கதாநயகனாகவும், மிர்னாலினி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இம்மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்று துவங்கியது. சென்னையில் இன்று துவங்கிய இந்த படப்பிடிப்பை பாரதீய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான சதீஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கார்த்திக் கே.தில்லை ஏற்றிருக்க நிவாஸ் பிரசன்னா இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ராதாகிருஷ்ணன் தனபால் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறைவி - மனிதி ப்ரோமோ வீடியோ


;