‘சூப்பர் டூப்பரி’ல் இணையும் துருவா, இந்துஜா!

அறிமுக இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிக்கும் படம் ‘சூப்பர் டூப்பர்’

செய்திகள் 20-Aug-2018 6:21 PM IST Top 10 கருத்துக்கள்

ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் ‘ஆண்மை தவறேல்’ படத்தில் நாயகனாக நடித்த துருவாவும், இந்துஜாவும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சூப்பர் டூப்பர்’. துருவா, இந்துஜாவுடன் சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன் ஆதித்யா ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை ‘ப்ளக்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படதின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. இது வித்தியாசமான காமெடி த்ரில்லர் படம் என்று கூறும் இயக்குனர் அருண் கார்த்திக் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் 45 நாட்களில் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தின் ஒளிப்பதிவை சுந்தர்ராம் கவனிக்க, திவாகர தியாகராஜன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை வேல்முருகனும், கலை இயக்கத்தை சூர்யாவும் கவனிக்கிறார்கள். .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;