‘உதயாவின் ஜட்ஜ்மென்ட் கரெக்டாக இருக்கும்’ - கார்த்தி

‘உத்தரவு மகாராஜா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில்  உதயா பற்றி கார்த்தி!

செய்திகள் 18-Aug-2018 7:15 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஜேசன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் உதயா கதாநாயகனாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. அறிமுக இயக்குனர் ஆசிஃப் குரிஷி இயக்கியுள்ள இந்த படத்தில் உதயாவுடன் பிரபு, மனோபாலா, கோவை சரளா, ஸ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு இப்படக்குழுவினரை வாழ்த்தினார்கள். அப்போது நடிகர் கார்த்தி உதயாவை வாழ்த்திப் பேசும்போது,

‘‘இங்கு நடிகர் விவேக் அவர்கள் பேசும்போது, அடுத்த ஒருவருடைய வெற்றியை தனது வெற்றியாக நினைத்து கொண்டாடுபவர் உதயா என்று! அது உண்மைதான்! நான் நடித்த படங்கள் வெளியாகிற அன்று உதயா ஃபோன் செய்து, ‘நான் படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது’ என்று சொல்லி அந்த படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் டீட்டெயிலாக பேசுவார். அவர் சொல்கிற ஒவ்வொரு விஷயங்களும் கரெக்டாக இருக்கும். அப்படி கரெக்ட்டா ஜட்ஜ்மெண்ட் பண்ணக் கூடியவர் உதயா!

அப்படிப்பட்ட உதயா இந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தை ரொம்பவும் கஷ்டப்பட்டு சொந்தமாக தயாரித்து நடித்திருக்கிறார். இதுவரைக்கும் அவர் நடித்த படங்களை அவர் அப்பா (ஏ.எல்.அழகப்பன்) திட்டிகிட்டுதான் தயாரித்திருப்பார்! ஆனால் முதல் தடவையாக இந்த படத்தை பாரத்து அவருடைய அப்பாபும், அம்மாபும் இந்த படத்தையும் உதயாவையும் வாழ்த்தியிருக்கிறார்கள். அப்பா, அம்மாவின் வாழ்த்து கிடைத்தால் போதும். நிச்சயமாக ஜெயித்து விடலாம்.

உதயா ரொம்பவும் ரிஸ்கான இந்த கதையை தேர்வு செய்து ரொம்பவும் கஷ்டபட்டு நடித்திருக்கிறார். உதயா எந்த தயக்கமும் இல்லாதவர்! அவர் எப்போதும் எப்படி இய்லபாக இருப்பாரோ அப்படித்தான் இப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு கேமரா முன்னாடி நின்னு நடிக்க எந்த ஒரு தயக்கமும் ஏற்பட்டிருக்காது. இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் அவருக்கு நிச்சயம் வெற்றியை தரும் என்பது உறுதியாகிறது. இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லோரும் உதயாவுக்காக வந்தவர்களாகதான் இருப்பார்கள். காரணம், உதயா அவ்வளவு நட்பு வட்டத்தை வைத்திருப்பவர். இங்கு வந்த எல்லோரும் உதயாவை பற்றிதான் பேசினார்கள். அதற்கு காரணம் அவர் எல்லோரிடமும் அன்பாக பழகுபவர். யாரையும் தப்பாக பேசமாட்டார். அவரது இந்த நல்ல குணத்திற்காகவே இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவர் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார் கார்த்தி!

#UtharavuMaharaja #Udhaya #Prabhu #Simran #KovaiSarala #Nassar #Karthi #UtharavuMaharajaAudioLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மபிரபு -டீஸர்


;