‘60 வயது மாநிறம்’ சென்சார் ரிசல்ட் மற்றும் ரிலீஸ் தேதி!

பிரகாஷ் ராஜ், விகரம் பிரபு, சமுத்திரக்கனி நடித்துள்ள 60 வயது மாநிறம் இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 18-Aug-2018 12:16 PM IST VRC கருத்துக்கள்

சத்தமில்லாமல் ராதாமோகன் இயக்கியுள்ள படம் ‘60 வயது மாநிறம்’. ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை சென்சார் குழுவினர் பார்வைக்கு எடுத்துச் செல்ல, சென்சார் குழுவினர் இப்படத்திற்கு அனைவரும் பாரக்க கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த படம் கன்னடத்தில் வெளியாகி பேசப்பட்ட ‘GODHI BANNA SADHARANA MAYKATTU’ என்ற படத்தின் ரீமேக்காம்! அனைத்து வேலைகளும் முடிவடைந்து, சென்சாரும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இப்படக்குழுவினர் முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த படம் தவிர ராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#60VayaduMaaniram #Prakashraj #Samuthrakani #VikramPrabhu #Radhamohan #Ilayaraja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;