19-ம் தேதி சென்னையில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு, நாளை மறுநால் சென்னையில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!

செய்திகள் 17-Aug-2018 5:58 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் (19-8-18) சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொள்வதற்காக அன்றைய தினம் சென்னையில் நடக்கும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் வருமாறு…

‘‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2018 ஆகஸ்ட் 19-ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அன்றைய தினம் நடிகர் நடிகைகள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வசதியாக சென்னை நகரில் மட்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘வை ராஜா வை’ உருவான விதம் - வீடியோ


;