சென்சார் குழுவினரின் பாராட்டுப் பெற்ற பா.விஜயின் ‘ஆருத்ரா’

ரிவைசிங் கமிட்டிக்கு சென்று சென்சாரில் U/A  சர்டிஃபிக்கெட் வாங்கிய பா.விஜயின் ஆருத்ரா!

செய்திகள் 14-Aug-2018 10:06 AM IST VRC கருத்துக்கள்

பாடலாசிரியர் பா.விஜய் தனது ‘வில் மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’. இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. வித்யாசாகர் இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பா.விஜய் படம் குறித்து பேசும்போது,

‘கருவறைக்குள் இருக்கும் பெண் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்’ என்ற விஷயத்தை இப்படத்தின் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.

சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதைஅ ‘ஆருத்ரா’. நிர்பயா, ஆஷிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்ஃபோனில் வாட்ஸ் அப்பை பார்வையிடுவதில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

இந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். படம் பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்று கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு U/A சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று பாராட்டினார்கள்! இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார் பா.விஜய்.இந்த படத்தில் பா.விஜயுடன் இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலி, யுவா, சோனி சிரிஸ்டா முதலானோர் நடித்திருக்கிறார்கள். ‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து பா.விஜய் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘ஆருத்ரா’வின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Aruthra #PaVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நையப்புடை - டீசர்


;