கமல் படத்துடன் களமிறங்கும் யுவன் சங்கர் ராஜா படம்!

யுவன் சங்கர் ராஜாவின் ‘பியார் பிரேமா காதல்’ ஆகஸ்ட் 10- ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 31-Jul-2018 6:19 PM IST VRC கருத்துக்கள்

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இணைந்து நடித்துள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’. யுவன் சங்கர் ராஜாவின் ‘YSR FILMS’ நிறுவனமும் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயரித்துள்ள இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்று படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. சென்சார் முடிந்த கையோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டார்கள்! இந்த படத்தை ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’, திரைப்படமும் ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. இதனால் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’வும், யுவன் சங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள’ பியார் பிரேமா காதல்’ படமும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

#PyaarPremaKaadhal #HarishKalyan #Raiza #Elan #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தனுசு ராசி நேயர்களே - டீஸர்


;