முதல் முறையாக ரஜினி, சிம்ரன்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியானார் சிம்ரன்!

செய்திகள் 18-Jul-2018 6:53 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சில வாரங்களுக்கு முன் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன் நடிக்கிறார் என்பதை இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே நேரம் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடிக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது ‘சன் பிக்சர்ஸ்’. தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள் சிம்ரன் இதுவரையிலும் ரஜினியுடன் இணைந்து நடித்ததில்லை! சிம்ரனின் அந்த குறை கார்த்திக் சுப்பராஜ் படம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம். தீபக் பரமேஷ் ஆகியோருடன் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்ற ஒரு தகவலும் சமீபத்தில் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

#Rajinikanth #Simran #NawazuddinSiddiqui #KarthikSubburaj #SunPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;