‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கி வரும் படம் ‘தேவராட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் முதன் முதலாக கலந்துகொண்டு நடிப்பது குறித்து மஞ்சிமா மோகன் ட்வீட் செய்துள்ளார். முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்களைப் போல் இப்படமும் கிராமத்து பின்னணியில் சொல்லப்படும் கதையாம். ‘அச்சம் என்பது மடமையடா’, ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களை தொடர்ந்து மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வேகமாக வளர்ந்து வருகிறது. ‘தேவராட்டம்’.
#GauthamKarthik #ManjimaMohan #Muthaiyah #StudioGreen #AchchamYenbathuMadamaiyada #AYM #Sathriyan #IppadaiVellum #Devarattam #NivasKPrasanna
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்...