ஆடு மேய்ப்பவர்களின் கதையாக உருவாகும் படம்!

35 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆடு மேய்ப்பவர்களின் கதையாக உருவாகும் படம் ‘தொரட்டி’

செய்திகள் 17-Jul-2018 11:01 AM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் மாரிமுத்து இயக்கி வரும் படம் ‘தொரட்டி’. சுமார் 35 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆடு மேய்ப்பதை தொழிலாக கொண்டவர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் தயாரிப்பில் இப்போது சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் கை கோர்த்துள்ளது. அறிமுகங்கள் ஷமன் மித்ரு, சத்யகலா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், மதுரை, புதுகோட்டை, சிவகங்கை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. கிராமத்து பின்னணியில் மிகவும் யதாரத்தமான காட்சிகளுடன் சொல்லப்படும் கதையாம் ‘தொரட்டி’. இதற்காக இந்த படத்தில் நடிக்கும் அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் இயக்குனர் மாரிமுத்து சுமார் 6 மாதக்காலம் நடிப்பு பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு இசை அமைத்தவர்களில் ஒருவரான வேத் சங்கர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை குமார் ஸ்ரீதர் கவனிக்கிறார். நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர் இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

#Thoratti

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;