சசி இயக்கத்தில் இணையும் சித்தார்த், ஜி.வி.!

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 16-Jul-2018 12:33 PM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி ‘இரட்டை கொம்பு’ என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் இப்போது சசி வேறு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சற்றுமுன் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. அறிமுகம் சித்துகுமார் இசை அமைக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகிள், மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

#Siddarth #GVPrakash #Sasi #Pichaikkaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வம் தாள மயம் டீஸர்


;