சித்தார்த் படத்தின் புதிய தகவல்!

சித்தார்த், கேத்ரின் தெரெசா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது!

செய்திகள் 14-Jul-2018 5:14 PM IST VRC கருத்துக்கள்

‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அறிமுக இயக்குனர் சாய்சேகர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்த படத்தில் சித்தார்த்துடன் வில்லனாக அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘றெக்க’ படங்களில் வில்லனாக நடித்த கபீர் சிங் நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது இவர்களுடன் சதீஷ், மதுசூதனராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒளிப்பதிவுக்கு ஏகாம்பரம், இசைக்கு எஸ்.எஸ்.தமன், படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ் என கூட்டணி அமைந்துள்ள இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து பல நாட்கள் நடக்கவிருக்கிறதாம், .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;