எழுத்தாளராகும் ‘விக்ரம் வேதா’ நாயகி!

பரத்நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார்!

செய்திகள் 13-Jul-2018 11:18 AM IST VRC கருத்துக்கள்

‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ முதலான படங்களில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்போது மாதவனுடன் ‘மாரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கவும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தேர்வாகியுள்ளார். தர்புகா சிவா இசை அமைக்கும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு துணிச்சலான ஒரு எழுத்தாளரின் கேரக்டராம். விஜய் சேதுபதி, மாதவனுடன் ‘விக்ரம் வேதா’வில் வழக்கறிஞராக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் எழுத்தாளராக நடிக்கும் இந்த படம் சைகாலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

#ShraddhaSrinath #Maara #Arulnidhi #Madhavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கே 13 டீஸர்


;