ஜிப்ரான் இசையில் ஹன்சிகா!

அறிமுக இய்க்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்!

செய்திகள் 10-Jul-2018 10:19 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுடன் ‘100’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஹன்சிகா அடுத்து கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் U.R.ஜமீல் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். தற்போது ‘விஸ்வரூபம்-2’ எம்.ராஜேஷ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஆண்தேவதை’, விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ராட்சஸன்’ முதலான படங்களுக்கு இசை அமைத்து வரும் ஜிப்ரான், ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தின் மேலும் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Ghibran #Hansika #URJameel

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;