மகிழ் திருமேனியின் உதவியாளர் இயக்கும் படம்!

மகிழ்திருமேனியின் உதவியாளர் கிருஷ்ணா பாண்டி இயக்கும் ‘எம்பிரான்’

செய்திகள் 10-Jul-2018 9:18 AM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் மகிழ் திருமேனியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிருஷ்ணா பாண்டி இயக்கும் படம் ‘எம்பிரான்’. சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் ரக படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜித் மேனன், ராதிகா பிரீத்தி, பி.சந்திரமௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன், ஆகியோர் நடிக்கிறார்கள். ‘பஞ்சவர்ணம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ப்ரசன் பலா இசை அமைக்கிறார். எம்.புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை மாயவன் கவனிக்கிறார். இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Embiran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;