நான்காவது முறையாக இணையும் சிம்பு, ஜோதிகா!

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’யில் கெஸ்ட் ரோலில் சிம்பு!

செய்திகள் 9-Jul-2018 11:12 AM IST VRC கருத்துக்கள்

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘காற்றின் மொழி’. ‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் விதார்த், லட்சுமி மஞ்சு ஆகியோரும் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஒரு கெஸ்ட் ரோலில் சிம்புவும் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு தரப்பினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே ‘சரவணா’, ‘மன்மதன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள சிம்புவும், ஜோதிகாவும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் நடித்துள்ளனர். ‘செக்கச் சிவந்த வானம்’ விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் ‘காற்றின் மொழி’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்து நடிக்கின்றனர் ஜோதிகாவும், சிம்புவும்! ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்றா ‘தும்ஹரி சுலு’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

#STR #Jyothika #KaatrinMozhi #RadhaMohan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;