‘விஸ்வாச’த்தில் இணைந்த ‘என்னை அறிந்தால்’ பிரபலம்!

‘என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடிக்கிறார் அனைகா!

செய்திகள் 7-Jul-2018 11:43 AM IST Top 10 கருத்துக்கள்

‘விவேகம்’ படத்தை தொடர்ந்து ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் நடிப்பில் சிவா இயக்கும் நான்காவது படமான இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ராஜமுந்திரியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ரமையா முதலானோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அனைகாவும் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அனைகா அஜித்தின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;