‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் - முக்கிய அறிவிப்பு!

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது!

செய்திகள் 2-Jul-2018 11:50 AM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்திற்கு ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இம்மாதம் 6-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 6-ஆம் தேதியும் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகாது என்றும், இப்படத்திற்கான புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ஆனந்த் பல்கி ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த வாரம் ‘சர்வர் சுந்தரம்’ ரிலீசாகாது என்பது உறுதியாகியுள்ளது.

#ServerSundaram #Santhanam #Vaibhavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர்


;