அரசு விழாவாக கொண்டாடும் சிவாஜி பிறந்த நாள்!

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை (அக்டோபர்-1) தமிழக அரசு விழாவாக கொண்டாட முடிவு!

செய்திகள் 29-Jun-2018 5:14 PM IST Top 10 கருத்துக்கள்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1-ஆம் தேதி வருகிறது. கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பலவேறு விருதுகளை பெற்று கலைத்துறைக்கு, குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பெரும் கலைஞர் சிவாஜி கணேசன். இந்நிலையில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினரும், சிவாஜி குடும்பத்தின் சார்பில் நடிகர் பிரபுவும் தமிழக அரசுக்கு நன்றியையும், தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது. இது சார்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் வருமாறு:

#SivajiGanesan #NadigarThilagam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவகாமியின் செல்வன் - டிரைலர்


;