கமலுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் பிரபலம்!

கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்த்ல்  விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்!

செய்திகள் 23-Jun-2018 12:09 PM IST Top 10 கருத்துக்கள்

விக்ரம் இப்போது ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்திலும் கௌதம் வேசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தவிர மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’, கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரிக்க, கமல் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து ஜிப்ரான் டிவீட் செய்துள்ளதில், ‘‘கமல்ஹாசன், விக்ரம், ராஜேஷ் எம்.செல்வா இணையும் படத்திற்கான பாடல் கம்போசிங் துவங்கி விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பாபநாசம்’, ‘தூஙாவனம்’, ‘விஸ்வரூபம்-2’ என கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து வரும் ஜிப்ரான் இப்போது கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் அவருடைய ஆஸ்தான இசை அமைப்பாளராகி விட்டார்!

#KamalHaasan #Vikram #Ghbiran #RajeshMSelva #AksharaHaasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;