படக்குழுவினருக்கு விருந்தளித்து கௌரவித்த சீமராஜா!

இறுதி நாள் படப்பிடிப்பன்று தொழிலாளர்களுக்கு விருந்து அளித்து கௌரவப்படுத்திய ‘சீமராஜா’ படக்குழுவினர்!

செய்திகள் 20-Jun-2018 11:36 AM IST VRC கருத்துக்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி. சிம்ரன் நெப்போலியன் முதலானோர் நடிக்கும் படம் ‘சீமராஜா’. ‘24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த படத்தில் பணியாற்றிய 57 டிபார்ட்மென்ட்களை சேர்ந்தவர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா விருந்து அளித்து பரிசுகளை வழங்கினார். இதற்காக தனியாக செட் அமைக்கப்பட்டு அதில் இந்த நிறைவு உபசார விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிறைவு உபசார விழாக்கள் நடப்பது அரிதான விஷயமாகும். இதுபோன்று ஒரு படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு விருந்தளித்து பரிசுகள் வழங்கும் வழக்கத்தை இதற்கு முன் ஆர்.டி.ராஜா தயாரித்து வெளியிட்ட ‘வேலைக்காரன்’ படத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது! .

#Seemaraja #SivaKarthikeyan #Samantha #KeerthySuresh #PonRam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;