22 வருடங்களுக்கு பிறகு மோகன்லால், பிரபு இணையும் படம்!

22 வருடங்களுக்கு பிறகு பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு இணைந்து நடிக்கும்ம் படம் ‘மரக்கார்’

செய்திகள் 19-Jun-2018 4:28 PM IST VRC கருத்துக்கள்

ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்து 1996-ல் வெளியான மலையாள படம் ‘காலாபானி’. இந்த படம் தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் பிரபு ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் இதுதான்! ‘காலாபானி’ திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகளான நிலையில் பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மரக்கார் - அரபி கடலின்டே சிம்ஹம்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் பிரபு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரரான குஞ்சாலி மரக்கார் பற்றிய சரித்திர படமாக உருவாகும் இந்த படத்தில் மோகன்லால், பிரபுவுடன் மற்றும் சில தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட கலைஞர்களுடன் ஹாலிவுட் கலைஞர்களும் பங்காற்ற இருக்கிறார்கள். அதற்கான தேர்வுகள் நடந்து வருகிறது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளும் கடலில் படமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பிரியதர்சனின் ட்ரீம் புரொஜக்ட்டாம் இந்த படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;