தனுஷின் ‘மாரி-2’வில் இணைந்த பிரபல நடிகை!

‘மாரி-2’வில் தனுஷுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் வித்யா பிரதீப்!

செய்திகள் 16-Jun-2018 4:38 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘மாரி-2’. இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸும் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வித்யா பிரதீப்பும் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சைவம்’, ‘பசங்க-2’, சமீபத்தில் வெளீயான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ முதலான படங்களில் நடித்த வித்யா பிரதீப் ‘மாரி-2’ படத்தின் மூலம் முதல் முதலாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் சசிகுமாரின் ‘அசுரகுலம்’, அருண் விஜய் நடித்து வரும் ‘தடம்’, கிருஷ்ணா நடிக்கும் ‘களரி’ முதலான படங்களிலும் விதயா பிரதீப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;