‘வட சென்னை’ - தனுஷ் முக்கிய அறிவிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் டிரைலர் ஜூலை 29-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 15-Jun-2018 1:22 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த இரண்டு முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார் தனுஷ். ‘காலா’ படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் ‘வட சென்னை’ படத்தின் டிரைலரை ஜூலை 28-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது என்றும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்பதையும் தனுஷ் ட்வீட் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்! ‘காலா’ படத்திற்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் தான் ‘வட சென்னை’ படத்திற்கும் இசை அமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

#VadaChennai #Dhanush #AishwaryaRajesh #VetriMaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;