ஆகஸ்ட்டில் வெளியாகிறது ஏ.அர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு புத்தகம்!

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு புத்தகம் ‘NOTES OF A DREAM’

செய்திகள் 14-Jun-2018 1:22 PM IST VRC கருத்துக்கள்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் புகழ்பெற்று விளங்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறை கிருஷ்ண திலோக் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். ‘NOTES OF A DREAM’ என்ற பெயரில் ஆங்கில புத்தமாக உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை PENGUIN RANDAOM HOUSE INDIA என்ற நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடவிருக்கிறது. 24 வயதுடைய கிருஷ்ண திலோக் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தில் ரஹ்மான் பற்றி ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தை இயக்கிய டானி பாயல் முகவுரை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பயனுள்ள ஒரு புத்தகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

#NotesOfADream #ArRahman #OscarNayagan #ARRahmanBiography #ARR

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;