மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி!

அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கும் ‘மாறா’ படத்தில் மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கிறார்கள்!

செய்திகள் 14-Jun-2018 11:30 AM IST VRC கருத்துக்கள்

‘விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து மாதவனும், ஷ்ரதா ஸ்ரீநாத்தும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை ‘கல்கி’ என்ற குறும் படத்தை இயக்கிய திலீப் குமார் இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு ’மாறா’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் ரொமாண்டிக் டிராமாவாக உருவாக இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இசைக்கு ஜிப்ரான், ஒளிப்பதிவுக்கு தீபக் பகவான், வசனத்துக்கு நீலன், படத்தொகுப்புக்கு புவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளார்களாம். இந்த படத்திற்கு வசனம் எழுதும் நீலன், எற்கெனவே ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ மற்றும் இப்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வசனம் எழுதியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#VikramVedha #Madhavan #ShraddhaSrinath #Maara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கே 13 டீஸர்


;