‘நயன்தாரா-63’ துவங்கியது!

அறிமுக இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 13-Jun-2018 6:34 PM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படத்தை தயாரித்த ’கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ‘லட்சுமி’ என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான கே.எம்.சர்ஜுன் இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதனால் ‘நயன்தாரா-63’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இவர்தான் ‘கயல்’ சந்திரன் நடிக்கும் ‘கிரகணம்’ படத்திற்கும் இசை அமைப்பாளர்! இந்த படத்தில் நயன்தாராவுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை! ‘விஸ்வாசம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ என்று பல படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


#Nayantara #Nayan63 #SarjunKM #KJRStudios #Lakshmi #Maa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெல்வெட் நகரம் ட்ரைலர்


;