சசிகுமார் படத்தின் முக்கிய அறிவிப்பு!

சசிகுமார் நடிக்கும் ‘அசுரவதம்’ இம்மாதம் 29-ஆம் தேதி  வெளியாகிறது!

செய்திகள் 13-Jun-2018 2:06 PM IST VRC கருத்துக்கள்

‘கொடிவீரன்’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’அசுரவதம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஃபிப்ரவரி மாதம் முடிந்து, அதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வந்தது. ‘செவன் ஸ்கீரின் ஸுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் லீனா தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.மருது பாண்டியன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிகுமாருடன் கதாநாயகியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளர். படத்தொகுப்பை கோவிந்தராஜ் செய்துள்ளார். அசுரவதம் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படத்தை இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதே நேரம் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள்-2’ படத்தின் படப்பிடிப்பும் இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்து இப்போது அதன் போஸ்ட புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது!

#Asuravadham #Sasikumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்


;