‘கத்தியை கையில் எடுக்காத ‘இந்தியன்’ டிராஃபிக் ராமசாமி!’ – இயக்குனர் ஷங்கர்

கத்தி இல்லாத இந்தியன் டிராஃஃபிக் ராமசாமி! இயக்குனர் ஷங்கர் புகழாரம்!

செய்திகள் 12-Jun-2018 3:33 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் சந்திரசேகரனிடம் உதவியாளராக பணிபுரிந்த விக்கி இயக்கியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரோகிணி நடித்துள்ளார். ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ‘ஹர ஹர மாகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் எஸ்.ஏஸ்.சந்திரசேகரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து இன்று புகழ்பெற்ற இயக்குனர்களாக விளங்கி வரும் ஷங்கர், பொன்ராம், எம்.ராஜேஷ் மற்றும் கவிஞர் வைரமுத்து, நிஜ டிராஃபிக் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில இயக்குனர் ஷங்கர் பேசும்போது, ‘‘எங்கே விதிமீறல்கள் நடந்தாலும் அதை எதிர்த்துப் போராடுகிற, தட்டிக் கேட்கிறவர் .டிராஃபிக் ராமசாமி அவர்கள்! அவர் ஒரு இன்ஸ்பயரிங்கான கேர்டர். அவர் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருகும். அவரிடம் ஒரு ஹீரோயிசம் தெரியும்! மனசுல அவருக்காக கை தட்டியிருக்கிறேன். இப்படி என் மனதில் பதிந்த அவருடையை கேரக்டரை வைத்து ஒரு படம் பண்ணணும் என்ற ஆசை என் மனதிலும் இருந்தது. காரணம், டிராஃபிக் ராமசாமி, கத்தியை கையில் எடுக்காத ஒரு இந்தியன். அதே மாதிரி ‘அந்நியன்’ படத்தில் வருகிற வயசான அம்பி கேரக்டர்! இந்த கேரக்டரை ரஜினி சாரை வைத்து எடுக்கணும் என்று கூட நினைத்தேன். அப்படி இருக்கும்போது இந்த பட அறிவிப்பு வந்தது. ஆஹா வட போச்சே என்று வருத்தப்பட்டேன்!

ஆனால் அதில் எஸ்.ஏ.சி.சார் பண்றார் என்றதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. காரணம் டிராஃபிக் ராமசாமியோட கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் அவர் தான்! எஸ்.ஏ.சி.சாருக்கு சமுதாயம் மீதுள்ள கோபம எல்லாம் எனக்கும் தெரிட்யும். டிரைலரில் அவரோட ஸ்கிரீன் பிரசென்ஸ் நல்லா வந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை பார்ப்பேன். இந்த படம் மிகப் பெரிய வெற்றிய பெறணும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார் ஷங்கர்!

#TrafficRamasamy #SAC #SAChandrasekar #DirectorShankar #Shankar #Indian #Indian2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;