பிரபல நடிகையின் மகளை அறிமுகப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகை விஜி சந்திரசேரின் மகள் லவ்லினை அறிமுகப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

செய்திகள் 12-Jun-2018 12:07 PM IST VRC கருத்துக்கள்

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் இந்த படத்தின் மூலம் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லினை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் லவ்லின், ராதா என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், இப்படம் குறித்த வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் முதன் முதலாக இயக்கிய ‘ஆரோகணம்’ படத்தில் விஜி சந்திரசேகர் தான் கதையின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவருடையை மகள் லவ்லினை தனது புதிய படத்தின் மூலம் அறிமுகப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், இதற்கு முன் அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு ‘ஹவுஸ் ஓனர்’ படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை! இந்த படம் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#LakshmiRamakrishnan #LovelynChandrasekhar #Radha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி டீஸர்


;