‘‘விரைவில் அண்ணனும், நானும் இணைந்து நடிப்போம்!’’ - கார்த்தி

‘கடைக்குட்டி சிங்கம்’ ஆடியோ விழாவில் நடிகர் கார்த்தி ருசிகர பேச்சு!

செய்திகள் 11-Jun-2018 6:09 PM IST Chandru கருத்துக்கள்

‘2டி என்டர்டெயின்மென்ட்’ சார்பாக சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, நாயகன் கார்த்தி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கடைக்கட்டி சிங்கம்’ படத்தின் ஆடியோவை வெளியிட்ட பின்னர் படத்தின் நாயகன் கார்த்தி பேசும்போது,

‘‘சிட்டியில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். கூடிய சீக்கிரம் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிப்போம்!’’ என்றார்.

விழாவில் சூர்யா பேசியது, ‘‘கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும்தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு நல்ல பலனைத் தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது’’ என்றார்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது ‘‘சூர்யாவுக்கும், கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்றுதான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது!’’ என்றார்..

#Karthi #Suriya #KadaikuttySingam #KKSAudioLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;