3ஆம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகும் ‘கும்கி 2’

நாயகியே இல்லாமல் 2 கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘கும்கி 2’ படக்குழு!

செய்திகள் 11-Jun-2018 3:26 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மிமேனன் அறிகுமான ‘கும்கி’ படம் 2012ல் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து தற்போது அதன் இரண்டாம்பாகம் உருவாகி வருகிறது. ஆனால், இந்தப்படத்தின் கதைக்கும், ‘கும்கி’க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, இப்படத்தில் முற்றிலும் வேறொரு நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது. நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோரும் நடிக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவாகும் நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் ‘கும்கி 2’ படத்தின் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கவேண்டிய குட்டி யானைக்காக பல நாடுகளில் தேடி அலைந்து கடைசியாக தாய்லாந்திலிருந்து யானையை கண்பிடித்துள்ளார்களாம். முதல் இரண்டு கட்டப் படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துவிட்டு, 3ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம் ‘கும்கி 2’ டீம்.

பிரபுசாலமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தை பென் இந்தியா லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

#Kumki2 #PrabhuSolomon #Sukumar #NivasKPrasanna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;