டார்ஜிலிங்கில் துவங்கியது ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் துவங்கியது!

செய்திகள் 9-Jun-2018 11:47 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிப்பில் 7-ஆம் தேதி வெளியான ‘காலா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிசியாகி விட்டார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் டாஜிலிங்கில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சனந்த் ஷெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். ரஜினி நடிப்பில் ‘எந்திரன்’ படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரஜினி நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்திற்கு பிறகு இந்த படம் வெளியாகும்.

#Rajinikanth #KarthikSubburaj #VijaySethupathi #Anirudh #SunPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கே 13 டீஸர்


;