சந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தில் பாலிவுட் நடிகை அன்யா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்!

செய்திகள் 9-Jun-2018 11:37 AM IST Top 10 கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இப்படம் சூப்பர் நேச்சுரல் எண்டர்டெயினர் படமாக உருவாகி வருகிறது என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் அன்யா சிங் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ‘லெக்ஸ் டலியானிஸ்’, ‘கைதி பேண்ட்’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்துள்ள அன்யா சிங் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக, இப்படத்தில் கருணாகரனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறதாம்.

#SundeepKishan #CaarthikRaju #AnyaSingh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நரகாசூரன் - டீசர்


;