‘கடைக்குட்டி சிங்கம்’ ஆடியோ ரிலீஸ் தேதி!

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப் பாடல்கள் 11-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 8-Jun-2018 6:23 PM IST Top 10 கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா முதலானோர் நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ‘ட்ரீட்’டாக இப்படத்தின் பாடல்கள் வருகிற 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கார்த்தி டி.இமான் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழிந்து கொண்டிருக்கும் விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்த பிரச்சனைகள் இந்தியா முழுக்க எழுந்துள்ள நிலையில் இந்த படம் விவசாயம் மற்றும் விவசாயி பற்றி பேச வருகிறது. இதில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#KKS #KadaiKuttySingam ##Karthi #Sayyesha #Priya #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;