சிவகுமார், சூர்யா கலந்துகொண்ட ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்துவக்க விழா!

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 5-Jun-2018 9:48 AM IST VRC கருத்துக்கள்

‘மொழி’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’. இந்த படம் ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தும்ஹரி சுலு’ படத்தின் ரீ-மேக் என்றும், இந்த படத்தை ‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன், எஸ்.விக்ரம் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜையில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சூர்யா கேமராவை ஆன் செய்ய, சிவகுமார் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்து படக்குழுவினரை வாழ்த்தினர்! இந்த படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய பாத்திரத்தில் விதார்த் நடிக்க, இவர்களுடன் லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன், சீமா தனேஜா, எம்.எஸ்.பாஸ்கர், மோகன் ராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். காஷிஃப் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்கிறார். கலை இயக்கத்தை கதிர் கவனிக்கிறார். வசனங்களை பொன் பார்த்திபன் எழுதுகிறார். ‘மொழி’ படத்தை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 50 நாட்கள் நடைபெறவிருக்கிறது! ‘காற்றின் மொழி’ படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

#KaatrinMozhi #Jyothika #Suriya #Dhanajayan #RadhaMohan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;