‘மிஸ்டர் சந்திரமௌலி’யின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் ரிசல்ட்!

கார்த்திக், கௌத்ம் கார்த்திக், ரெஜினா கேசண்ட்ரா நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி ஜூலை 6-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 28-May-2018 6:18 PM IST VRC கருத்துக்கள்

திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் முதலானோர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. ‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இப்படம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் ‘மிஸ்டர் சந்திரமௌலி’க்கு U/A சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ள படக்குழுவினர் ‘மிஸ்டர் சந்திரமௌலி’யை ஜூலை மாதம் 6-ஆம் தேதி வெளியிட முடிவு செய்து . அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருக்கிறார்கள். 2 மணி 20 நிமிடங்கள் ஓடும் விதமாக அமைந்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#MrChandramouli #GauthamKarthik #Regina #Varlakshmi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

7 (செவன்) - ட்ரைலர்


;