விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய் ஆண்டனி பட இயக்குனர்!

‘சலீம்’, ‘சதுரங்கவேட்டை-2’ பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் விக்ரம பிரபு நடிக்கும் படம்

செய்திகள் 28-May-2018 11:06 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சலீம்’ படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர் இப்போது ‘சதுரங்கவேட்டை-2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, திரிஷா முதலானோர் நடிக்கிறார்கள். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நிர்மல் குமார் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். அரோல் கரோலி இசை அமைக்கிறார். 2008-ல் தமிழகத்தில் நடந்த ஒரு உணமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம பிரபுவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

#VikramPrabhu #Salim #NVNirmalKumar #Sathurangavettai2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;